தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான கடந்த கால செவ்வியொன்றை மீள் பிரசூரம் செய்த இந்திய சஞ்சிகையான ப்ரண்ட்லைனுக்கு இலங்கையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சஞ்சிகையை விநியோகம் செய்யுமாறு சுங்கப்பிரிவினருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்திய சஞ்சிகையான ப்ரண்ட்லைன் சஞ்சிகையின் 30ஆம் இதழை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய இலங்கை கட்டுநாயக்க சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்திருந்தனர்.
1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நேர்காணல் இம்முறையும் சஞ்சிகையில் மீள்பிரசூரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நேர் காணல் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடுமென்ற அடிப்படையில் பிரசூரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சஞ்சிகையினால் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது இதனை புழக்கத்தில் விடுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ப்ரொன்ட்லைன் சஞ்சிகையானது இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான தி ஹிந்து ஊடகத்தின் ஓர் பிரசூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment