உலகக் கோப்பை தொடரின் 7வது ஆட்டம் ஆஸ்திரேலியத் தலைநகர் கன்னிபெராவில் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் – வங்காள தேசத்திற்கிடையேயான இந்த போட்டியில், வங்காளம் முதலில் பேட் செய்தது. 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்காள தேசம்.
இதைத் தொடர்ந்து ஆப்கான் களமிறங்கியது. 3 ஓவர்களில், 3 ரன்கள் எடுத்ததுடன் 3 விக்கெட்டுகளையும் இழந்தது வங்க தேசம். தற்போதைய நிலவரப்படி 26.4 பந்துகளுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 80 ரன்களைப் பெற்றுள்ளது ஆப்கான்.
உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திலேயே சின்ன அணியான ஐயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை ஓடவிட்டதில் இருந்தே, சின்ன அணிகளின் மேட்ச் மீது கிரிக்கெட் ரசிகர்களது கவணம் விழத் தொடங்கி விட்டது.
ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு இப்போதே தெரிந்துவிட்டது என்றாலும், ஆட்டத்தின் கடைசி சில ஓவர்களிலும் நிலை மாறலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

No comments:
Post a Comment