சன்னிலியோன் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்பதுதான் உண்மை. கனடாவில் ஆபாச படங்களில் நடித்து வந்தவர் ஒரு வாய்ப்புக்காக பாலிவுட் பக்கம் வந்து தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
இந்தாண்டு அவருடைய கைவசம் அதிகமான படங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏக்தா கபூரின் ’ஜிஸம் 2’ படத்தின் மூலம் அறிமுகமான சன்னிலியோன் தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ்-2 போன்ற படங்களில் நடித்தார். விரைவில் அவருடைய நடிப்பில் ‘லீலா’என்ற படம் வெளிவரவிருக்கிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரை பார்த்தே சூடாகிவிட்டார்கள் ரசிகர்கள். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதுவரை, தன்னுடன் நெருக்கமாக நடிக்கும் நடிகர்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவித்திராத சன்னி லியோன், இனி முதன்மைப்பட்டியல் (A list) நடிகர்களுடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள ஏக் பஹேலி லீலா படத்தை, பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment