Wednesday, 18 February 2015

இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு..?


தனுஷ், அக்‌ஷரா ஹாசன், அமிதாப் பச்சன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ’ஷமிதாப்’.படம் ரிலீஸாவதற்கு முன்பு, படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு படம் ரிலீஸுக்கு பின்பு கிடைக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் பாலிவுட் திரையுலகில் சொல்லப்படுகிறது.
ஆனால் தமிழ் சினிமாவோ ஷமிதாப் படத்தை இன்னும் கொண்டாடி வருகிறது. இப்படத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் நடிப்பும், இளையராஜாவின் இசையும் மிரட்டலாக இருக்கிறது என்று தமிழ் மீடியாக்கள் கூறிவருகின்றனர். ஆனால் வடநாட்டு மீடியாக்களோஅமிதாப் ஒருவருக்காக மட்டுமே ஷமிதாப் படம், மற்றப்படி படத்தில் ஒன்னும் இல்லை என்று கூறிவருகின்றன. தனுஷை பற்றியோ..? படத்தின் ஹீரோவான இளையராஜாவை பற்றியோ..? ஒரு வார்த்தை கூட அவர்கள் சொல்லவில்லை.
மேலும் ஷமிதாப் படத்தில் தனுஷுக்கே அதிகம் முக்கியம் கொடுத்திருப்பதாகவும், அமிதாப்பை கண்டுக்கொள்ளவில்லை என்பதாலும் இப்படத்தை அவர்கள் கேவலமாக எழுதி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளுக்கு மேல் வெளியான ஷமிதாப் படம் சுமார் 25 கோடிக்கும் சற்று அதிகமாக மட்டுமே வசூலித்திருக்கிறதாம். இந்தி சினிமாவில் அமிதாப் பச்சன் என்றாலே அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமிருக்கும், அவர்கள் வந்து படத்தைப் பார்த்தால் கூட போதும் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும்.
ஆனால், அப்படி எதுவும் நடக்காமல், 1500 திரையரங்குகளில் வெளியாகி சுமார் 25 கோடிக்கும் சற்று அதிகமாக மட்டுமே இந்தப் படம் வசூலித்திருக்கிறது என பாலிவுட் பிசினஸ்மேன்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சிகரமான தகவல். அதிலும் இந்தியாவில் மட்டும் 20 கோடி ரூபாய் அளவிற்குத்தான் வசூலாம்.
மல்டி பிளக்ஸ்களில் இருக்கும் 'ஏ' சென்டர் ரசிகர்களுக்கான படம் இது என்று சொல்லப்பட்டாலும் அவர்களும் திரையரங்கு பக்கமே வராதது ஏன் என்று முழித்துக் கொண்டிருக்கிறார்களாம். மேலும் பாலிவுட்டில் சமீபத்தில் மிகப் பெரிய அதிர்ச்சிகரமான தோல்வி 'ஷமிதாப்' படம் தான் என்று பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் பேசிக் கொள்வதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment