Wednesday, 18 February 2015

சுவிஸ்ஸில் இந்தத் தொழிலுக்கு இவ்வளவு ஆதரவா….??


தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் சுவிட்சர்லாந்து, தொழில்துறையினரின் சொர்க்க பூமி என்பது அனைவரும் அறிந்ததே.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் வரிசையில், இருக்கும் சுவிட்சர்லாந்து, பாலியல் தொழிலை ஆதரிக்கும் நாடுகளின் வரிசையிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல, உலகில் எந்த நாடுகளும் கொடுக்காத அளவு, பாலியல் தொழிலாளிகளுக்கு அதிக அளவு சலுகைகளை இந்நாடு வழங்கி வருவது தான் வினோதம்.
பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ய ஊக்குவிப்பது, அவர்களை சமூகத்தின் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பது, குறிப்பிட்ட வயதிற்கு பின் ஓய்வூதியம் வழங்குவது போன்ற பல சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது சுவிஸ் அரசு.
இதனால் உள்நாட்டு பாலியல் தொழிலாளர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் பலர் வந்து தொழில் செய்து வருகின்றனர். 1942ம் ஆண்டு முதலே சுவிஸ்ஸில் பாலியல் தொழில் அதிகாரப்பூர்வமாக இருந்து வருகிறது.
அப்போதைய சட்டப்படி 16 வயதடைந்த பெண்கள் விருப்பப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு அரசு உரிமை அளித்திருந்தது. இதனால், சிறுமிகள் பெருமளவில் வழிமாறிச் சென்றுவிட்டதால், நாடெங்கும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும் 60 ஆண்டுகள் வரை இந்த முறை தொடர்ந்து வந்தது. கடைசியாக 2013ம் ஆண்டு தான் 16 வயது 18 வயதாக உயர்த்தப்பட்டது. சுவிஸ்ஸின் டிசினோ(Ticino) நகரம் இதற்கு பெயர் போன நகரம்.
இங்கு இவர்களை பாதுகாப்பதற்காகவே டெசியூ(Teseu) என்ற தனி போலீஸ் படை இருக்கிறது. இந்த டெசியூ படையின் வேலை, பாலியல் தொழிலாளர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கென தனித் தனியாக கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை சரிபார்ப்பது போன்றது தானாம்.
உலகிலேயே பாலியல் தொழிலாளர்களுக்கு காவல்துறை இருப்பது சுவிஸ்ஸின் டிசினோ நகரில் மட்டும் தான். அதோடு இந்நகரில் வசிக்கும் பாலியல் தொழிலாளிகள் அவர்களது வருமாணத்தின் அடிப்படையில் அரசிற்கு வரி செலுத்த வேண்டுமாம்.
இந்த வரியிலும் சலுகைகள் பல ஒளிந்திருக்கின்றன. தொழிலாளி தனது வாடிக்கையாளருக்கு செய்யும் தொலைப்பேசி கட்டணம், வாடிக்கையாளர்களின் இடத்திற்கு செல்லும் பயண செலவுகள், தங்களது அழகை பராமரிக்கும் ‘மேக்-அப்’ செலவுகள், மருத்துவ செலவுகள், ‘Plastic Surgery’ உள்ளிட்ட செலவுகள் அனைத்திற்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படு கிறதாம்.
தவறாமல் வரி செலுத்தி வரும் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறதாம். இதனால், இந்நகரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாலியல் தொழிலாளிகளுக்கு ஒரு சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது.
இதனாலேயே, அமெரிக்கா, இத்தாலி, மத்திய ஐரோப்பா, கிழக்கத்திய நாடுகளை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களும் சுவிஸ்ஸிற்கு படையெடுத்து வருகின்றனர். சுவிட்சர்லாந்தின் டிசினோ, சூரிச், லுகானோ, கடினாஸோ, பெல்லிஸோனா போன்ற நகரங்களில் பாலியல் தொழிலாளிகள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
இவர்களால் யாருக்கு குஷியோ இல்லையோ, சுவிஸ் அரசிற்கு செம குஷி. காரணம், இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமாணம் அரசுக்கு கிடைக்கிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் இந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையால், இவர்களுக்கென சில மேம்பாடுகளை கொண்டுவருவதும் சுவிஸ்ஸில் நடந்து வருகிறது.
அண்மையில், சூரிச் நகரில், அரசு சார்பில் Drive in Sex-Box என்ற ஒரு சிறிய கூடாரம் போன்ற அறைகளை வடிவமைக்கப் பட்டுள்ளது. காரிலேயே தொழிலை நடத்துவதற்காக இந்த வசதியைச் செய்து கொடுத்துள்ளது சுவிஸ் அரசு.
இவ்வாறு, பாலியல் தொழிலாளர்களுக்கு அரசே உதவுவதால், இங்கு பாலியல் தொழிலாளிகள் சக மக்களுடன் சகஜமாகவே வாழ்ந்து வருகின்றனர். அரசின் இந்த சலுகைகளால், வாழ்வில் விரக்தி அடைந்த பெண்கள், அல்லது வாழ்விழந்த பெண்கள் இந்த தொழிலுக்கு ஈர்க்கப்படுகின்றனர்.
அது மட்டுமல்லாது, கல்லூரி மாணவிகளும், சிறுமிகளும், சலுகைகளுக்கு ஆசைப்பட்டே தவறான வழியில் சென்று வாழ்கையைத் தொலைப்பது சுவிஸ்ஸில் சர்வ சாதாரணமாகிவிட்டது.
உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடு என்றும், தொழில் துறையில் சிறந்த நாடு என்றும் பெயர் பெற்றுள்ள சுவிட்சர்லாந்திற்கு, இந்த பாலியல் தொழில் சலுகைகளும், ஆதரவும் ஒரு களங்கமாகவே இருந்து வருகிறது.

No comments:

Post a Comment