2015ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் தனது முதல் லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆடி பரிதாபமாக தோற்றது.
இந்த தோல்வி பாகிஸ்தான் வீரர்களை மிகவும் பாதித்துள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கில் சொதப்பி தோற்ற கோபத்தை பீல்டிங் பயிற்சியாளர் கிராண்ட் லுடென் (Grant Luden) மீது காண்பிக்க தொடங்கியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த பயிற்சியின்போது மூத்த வீரர்கள் அப்ரிடி, உமர் அக்மல், அகமது ஷெசாட் ஆகியோர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். பயிற்சிக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, மூத்த வீரர்களை சமாளிக்க என்னால் முடியவில்லை, எனவே என்னை அவமானப்படுத்தியதற்க்காக தான் பதவியையும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பயிற்சியாளர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கிரிக்கெட் வாரியம் வீரர்களிடம் விவரம் கேட்டறிந்து, இப்பிரச்சினையை சரி செய்வதாக கிராண்ட் லுடெனிடம் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில் உலக கோப்பை தொடரில் ஆடுவதற்கு, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சரியான நேரத்தில் ஹோட்டலுக்கு திரும்பவில்லை என்பதற்காக அபராதத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment