Tuesday, 3 February 2015

புகைப் பிடித்தலை ஒழிக்க, இந்தியா டெக்னிக்கை 'Follow' பன்னும் இங்கிலாந்து!!


இந்தியா டெக்னிக்கை ஃபாலோ பன்னும் இங்கிலாந்து!! இங்கிலாந்தில் புகைப் பிடித்தலால் ஏற்படும் தீங்குகளை குறைக்கும் விதமாக, மக்கள் அதிகம் புழங்கும் நகரங்களின் சில இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்து வருகிறது.
ஏற்கனவே உலகின் சிறந்த நகரங்களான கனடாவின் டொரேண்டோ, அமெரிக்காவின் நியூயார்க், சீனாவின் ஹாங் காங் ஆகிய இடங்களில் இவ்வாறு நகரத்தின் நடுவில் ஒரு சில இடங்களில், புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் இங்கிலாந்தும் பிரிஸ்டல் நகரின் இரண்டு இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்துள்ளது. பிரிஸ்டலின், மில்லெனியம் ஸ்குவேர் மற்றும் ஆங்கர் ஸ்குவேர் ஆகிய இடங்களில் தான் இந்த புகைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தின் நேரதி உத்தரவு இல்லை. இது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் 61 சதவீத மக்கள் புகைபிடிக்க தடை விதிக்க வாக்களித்துள்ளனர்.
செயலாளர் ஃபையோனா ஆண்ட்ரூஸ் இது குறித்து பேசுகையில், ”நகரத்தின் இந்த இடங்களில் நிறைய குழந்தைகள் விளையாடுகின்றனர். அவர்கள் இந்த புகை இல்லாத சூழலில் இன்னும் ஆரோக்கியமாக விளையாட முடியும்” என்று கூறினார்.
பிரிஸ்டலின் துனை மேயர் டேனியெல்லா ரேடிஸ் பேசுகையில், “இந்த வருடம் பிரிஸ்டல் ஐரோப்பிய கிரீன் கேபிடல் விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறது.
இது போலான வழிமுறைகள் மக்களின் தீய பழக்கங்களை குறைப்பதுடன், பிரிஸ்டலை எல்லோரும் வந்து சந்தோஷமாக பார்த்து ரசிக்கும் ஒரு இடமாகவும் மாற்றும்” என்று கூறினார்.
இந்த புகைக் கட்டுப்பாடு முறை ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எந்த அளவுக்கு இதை நம்ம ஆளுங்க பின்பற்றுகிறார்கள் என்பது.... ? ?

No comments:

Post a Comment