Tuesday, 3 February 2015

தம்பி நீ பேசுறது சரில.. வாயை மூடு.. பவர் ஸ்டாரை கதற விட்ட தயாரிப்பாளார்..!


மலையோர கிராமங்களில் வாழும் பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் ‘தொப்பி’.‘மதுரை சம்பவம்’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் டி.சிவா, பி.எல்.தேனப்பன், ராதாகிருஷ்ணன், விஜயமுரளி, மற்றும் இயக்குநர்கள் ஜி.என்.ரங்கராஜன், கே.பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், சீனுராமசாமி, சிங்கம் புலி, நடிகர்கள் விமல், பவர் ஸ்டார் சீனிவாசன் என பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பவர் ஸ்டார்.. தயாரிப்பாளர்கள் தனக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாத்தி விடுகிறார்கள் என்றும், அவர்கள் என்னை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்பதை போலவும் பேசினார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கோரிக்கையையும் வைத்தார். அது என்னவென்றால் இப்போது ஏராளமான தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருகிறார்கள்.
அவர்கள் படம் எடுக்க வரும்போது 2 கோடி, அல்லது 3 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சொல்ல வேண்டும். அப்படி செய்தால்தான் என்னை போன்றவர்களுக்கு அதை வைத்து சம்பளம் கொடுக்க முடியும்’’ என்றார். பவர் ஸ்டாரின் இந்த கோரிக்கைக்கும் பலத்த கைத்தட்டல் கிடைத்தது.
இப்படி மேடைக்கு மேடை பவர் ஸ்டார் சீனிவாசன் எல்லோரையும் சிரிக்க வைக்க ஏதாவது பேசுவது வழக்கம். ஆனால் இந்த விழா மேடையில் பவர் ஸ்டாரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்தன.
பவர் ஸ்டாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ‘‘பொது மேடைகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசவேண்டும். அவர் பேசுவது சரியல்ல.. வாயை அடக்கி பேசவேண்டும், மேடையில் கவனமாக பேச வேண்டும்.
பவர் ஸ்டார் சீனிவாசன் என்பவர் வெளியில் தெரிந்தது எப்படி? அவரை வெளியில் தெரிய வைத்தது ஒரு தயாரிப்பாளர் தான்! பணம் போட்டு படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் இல்லை என்றால் இவர் வெளியில் தெரிந்திருக்க மாட்டார்’’ என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சிங்கம் புலி, ‘‘பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுவது சரியல்ல. நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டமான வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நடித்து முடிப்பதுடன் நமது வேலை முடிந்து விடுகிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய பெரும்பாடு படுகிறார்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு பவர் ஸ்டார் சீனிவாசன் பேசவேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment