ஹாலிவுட்டின் சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் ஒன்றான 'பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’ (fifty shades of grey) படத்தை திரையிடுவதற்கு பல நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தின் காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக குற்றம்சுமத்தப்படுவதே இதற்குக் காரணம்.
இந்தியா, மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இப்படத்துக்கு தடைவிதித்துள்ளன. இப்படத்தை ஆபாசப் பாலியல் படம் என மலேஷிய திரைப்பட தணிக்கச் சபையின் தலைவர் அப்துல் ஹலீம் அப்துல் ஹமீட் விமர்சித்துள்ளார்.
"இப்படத்திலுள்ள பாலியல் காட்சிகள் இயற்கையானவை அல்ல. அதைவிட மிக குரூரமானவையாக உள்ளன" என அவர் தெரிவித்துள்ளார். ஈ.எல். ஜேம்ஸ் எனும் புனைபெயரில் எரிக்கா மிஷெல் எனும் பெண் எழுதி பரபரப்பாக விற்பனையாகிய 'பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’ நாவலே அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாம் டெய்ல் ஜோன்ஸன் இயக்கிய இப்படத்தில் ஜெமி டோர்னன், டகோட்டா ஜோன்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த வாரம் இத்திரைப்படம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment