Monday, 23 February 2015

செல்பி எடுக்க இந்த பொண்ணுங்க செஞ்ச வேலைய பாருங்க…..!


ஸ்மார்ட் போன்கள் மூலம் தன்னைத்தானே எடுத்துக்கொண்டு பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் தரவேற்றம் செய்யும் புகைப்படத்தைக் குறிக்கும் புதிய ஆங்கிலச் சொல்லான 'செல்பி' என்ற வார்த்தையை, ஆக்ஸ்போர்ட் அகராதிகள் 2013ஆம் ஆண்டுக்கான சொல்லாகத் தேர்ந்தெடுத்திருந்தன.
அவ்வாறு புகழ்பெற்ற செல்பியை எடுத்துக்கொள்வதற்கு, உயிரை கூட பணயம் வைக்க தயாராக உள்ளார்கள் என்றால் நம்புவீர்களா? அயர்லாந்தில் உள்ள கார்க் நகரத்தில் உள்ள செயின்ட்ட ஆனி தேவாலயத்துக்கு அருகில் உள்ள ஷெடோன் பெல்ஸ் கோபுரத்தில் ஏறிய இரண்டு பேரே, இவ்வாறான விபரீத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கோபுரம் 120 அடி உயரத்தை கொண்டது. இந்த கோபுரத்தின் மேல் ஏறினால், 360 பாகை பரப்பை முழுமையாக பார்க்க முடியுமாம். ஆனால் கோபுரத்தின் உள்ளிருந்தே அனைத்தையும் பார்வையிடுவது வழக்கம். ஆனால், குறித்த கோபுரத்துக்கு சென்ற இரண்டு பெண்கள் கோபுரத்தின் உள்பகுதியில் இருந்து வெளியே வந்து செல்பி எடுத்துள்ளனர்.
கோபுரம் உயரமானது என்பதனால், கடுமையான காற்று வீசக்கூடும் இது மிகவும் ஆபத்தானது என்று அவர்களை கோபுரத்தில் கண்டோர் தெரிவித்துள்ளனர். இதனை கவனித்த கோபுர பணியாளர்கள் அவர்களை பாதுகாப்பாக உள்ளே அழைத்துச்சென்றுள்ளனர்.
ஏன் வெளியே சென்றீர்கள் என்று கேட்டதற்கு, செல்பி எடுக்கச் சென்றோம் என்று அவர்கள் இலகுவாக பதிலளித்தார்களாம். -

No comments:

Post a Comment