ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிப்பதற்கு பிரித்தானிய நடிகர் இத்ரீஸ் எல்பா (Idris Elba) பொருத்தமானவர் என ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பியர்ஸ் பிரஸ்னன் (Pierce Brosnan) கூறியுள்ளார்.
நைஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த 46 வயதான இத்ரீஸ் எல்பா, நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் மண்டேலாவாக நடித்தவர். ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிப்பதற்கு பொருத்தமானவர் யார் என்ற கருத்துக்கணிப்பில் முன்னிலையில் உள்ள நடிகர்களில் ஒருவராக இத்ரீஸ் எல்பா உள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிப்பதற்கு தேர்வுசெய்யப்பட்டால் அவ்வேடத்தில் நடிக்கும் முதலாவது கறுப்பின நடிகராகவும் இத்ரீஸ் எல்பா விளங்குவார். இப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 1994 முதல் 2002 ஆம் ஆண்டுவரை ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த நடிகர் பியர்ஸ் பிரஸ்னனும் இத்ரீஸ் எல்பாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடித்த நடிகர்களில் மிகச் சிறந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக பியர்ஸ் பிரஸ்னன் கருத்துக்கணிப்பொன்றில் தேர்வுசெய்பப்பட்டிருந்தார். தற்போது தயாரிக்கப்படும் "ஸ்பெக்ரர்" எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிறேக் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment