Monday, 23 February 2015

11 அடி மீனை ஒரே ஆளாக பிடித்த, 16 வயது கடல் ராசா….!!


அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவன் 480 கிலோகிராம் (1058 இறாத்தல்) எடையுள்ள பெரிய மீன் ஒன்றை பிடித்துள்ளான். ஹவாய் தீவுக்கு அருகில் கடந்தவாரம் இந்த மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரைச் சேர்ந்த 16 வயதான கெய் ரிஸாட்டோ எனும் சிறுவனே இந்த பெரிய மீனை பிடித்தமை குறிப்பிடத்தக்கது. 11 அடி நீளமான இந்த மீன் 30 நிமிட நேரம் போராடிய பின்னரே ஓய்ந்ததாக கெய் ரிஸாட்டோ தெரிவித்துள்ளார்.
காய் ரிஸாட்டோவின் பாட்டனாரான ஜிம் ரிஸாட்டோ இது குறித்து கூறுகையில், "இம்மீனை பிடிப்பதற்கு கெய் ரிஸாட்டோ கடினமாக பாடுபட்டான். தொழிற்சார் தன்மைகளுடன் அவன் அமைதியாக இருந்து அம்மீனை பிடித்தமை ஆச்சரியமாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment