Tuesday, 3 February 2015

ரயில் டிக்கெட்டும் இனி ‘Cash On Delivery’-ல் பெறலாம்..!


COD அதாவது ‘Cash On Delivery’ மூலம் பொருட்கள் வாங்குவது தற்போதெல்லாம் சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது.
ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங்கை பயன்படுத்தி பொருட்கள் வாங்க தயங்குபவர்களை கவர COD முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை வீட்டில் டெலிவரி பெறும்போது பணம் செலுத்தினால் போதும்.
இதனை இந்திய ரயில்வே துறையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது 200 நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் அனைத்து நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பயணம் செய்வதற்கு 5 தினங்களுக்கு முன்பாக பதிவு செய்யலாம். இதனை பதிவு செய்யBookMyTrain.com என்ற இணைய பக்கத்தில் புக் செய்யலாம்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுவதாவது, ‘இதன் மூலம் நெட் பேங்கிங், க்ரெடிட் கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்த இயலாதவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment