Tuesday, 3 February 2015

விரல் நடிகர், நடன மாஸ்டரை தொடர்ந்து ’நயன’ நடிகையின் அடுத்த காதல்..!


நயனமான நடிகைக்கு இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு தான் தமிழ் திரையுலகில் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
முதலில் விரல் நடிகருடன் காதல் ஏற்பட்டு பல இடங்களில் ஒன்று சேர்ந்து சுற்றிய நயன நடிகை.. இருவரும் நெருக்கமாக இருக்கு புகைப்படங்கள் வெளிவந்ததால் அந்த காதலை உதறி தள்ளிவிட்டார். காரணம் அந்த புகைப்படத்தை வெளியிட்டதே விரல் நடிகர்தானாம்.
அதன்பிறகு நயன நடிகைக்கு நடன இயக்குநருடன் காதல் ஏற்பட்டது. அந்த காதலாவது கல்யாணத்தில் முடியும் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியே ஏற்பட்டது. காரணம் இவர்கள் சுத்தாத இடமில்லை.. போகாத ஊரில்லை.. ஏன் ஒரே அறையில் கூட தங்கி இருக்கிறார்கள். நடன இயக்குநருக்காக நயன நடிகை மதம் கூட மாறினார்.
இதனால் இந்த காதலாவது நிச்சயம் கல்யாணத்தில் முடியும் என்று எதிர் பார்த்தார்கள் கோடம்பாக்கத்தினர். ஆனால் இதுவும் ப்ரேக் அப் ஆனாது. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை சரியான ரீசன் தெரியவில்லை. அதன் பிறகு நயன நடிகை தன் வேலை உண்டு தன் வீடு உண்டு தொழிலிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நயன நடிகைக்கு பிரபலம் இல்லாத நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளதாம். இரண்டு பெயர்களை கொண்ட அந்த இளம் நடிகர் பார்க்க ஆறடி உயரத்தில், சிவப்பாக நச்சுனு இருக்கிறாராம். இந்த நடிகரின் ஆதரவும், அரவணைப்பும் நயன நடிகைக்கு பிடித்து இருக்கிறதாம்.
இதனால் இருவருக்கும் இடையே காதல் தீப் பற்றிக்கொண்டதாம். ஆனால் எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே வேற எதுவும் இல்லை என்று கூறுகிறாராம் நயன நடிகை..
கணேசா...வெங்கட்ராமா... இது காதலோ... நட்போ.. ஆனால் இதுவாது கடைசி வரை நீடிக்குமா..?

No comments:

Post a Comment