Thursday, 19 February 2015

BMW i8 அறிமுகம் செய்த சச்சின்…!


இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர், புதிய 2015 BMW i8 ரக ஆடம்பர காரை மும்பையில் நேற்று அறிமுகம் செய்துவைத்தார். இந்தியாவில் இந்த றைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் விலை 2.29 கோடி ரூபாய் ஆகும்.
சச்சின் தெண்டுல்கர் பி.எம்.டபிள்யூ கார் அபிமானியாவார். 1989 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாட ஆரம்பித்த அவர் 1993 ஆம் ஆண்டு தனது முதலாவது பி.எம்.டபிள்யூ காரை வாங்கியிருந்தார். அது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஒரு செகன்ட் ஹேன்ட் காராகும். ஆனால், அன்றைய நிலையில் அதைத்தான் அவரால் வாங்க முடிந்தது.
ஆனால் பின்னர் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அவர் விளங்கியபோது உலகின் எந்த காரை வேண்டுமானாலும் வாங்கும் ஆற்றல் கொண்டவராக தெண்டுல்கர் மாறினார்.
இது குறித்து சச்சின் தெண்டுகல்கர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் எப் போதுமே பி.எம்.டபிள்யூ ரசிகனாக இருந்தேன். எனக்கு 14 வயதானபோது இக்கார்களின் மீது ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது.
1993 ஆம் ஆண்டு செகன்ட் ஹேன்ட் பி.எம்.டபிள்யூ ஒன்றை முதல் தடவையாக நான் ஓட்டினேன்" என அவர் கூறினார். பின்னர் சச்சின் தெண்டுல்கரை தனது வணிகத் தூதுவராக பி.எம்.டபிள்யூ நிறு வனம் நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment