செவ்வாய்க்கிரகத்திற்கு 2024 ஆம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள விண்ணப்பித்த இறுதி 100 வேட்பாளர்களில் ஒருவரான பிரித்தானிய பெண்ணொருவர், தான் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் குழந்தையொன்றை பிரசவித்து அங்கேயே உயிரிழக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிரகத்தில் குழந்தையை பிரசவிப்பதிலுள்ள அபாயங்கள் குறித்து அறியப்படாத போதும், தான் செவ்வாய்க்கிரகத்திலான முதலாவது குழந்தையை பிரசவிக்க எதிர்பார்த்துள்ளதாக மகிலியு (24 வயது) என்ற மேற்படி பெண் தெரிவித்தார்.
(வீடியோ கீழே)
செவ்வாய்க்கிரகத்துக்கான ஒரு வழிப் பயணத்துக்கு விண்ணப்பித்த சுமார் 200,000 விண்ணப்பதாரிகளில் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட 100 பேரில் மகி உள்ளடங்குகிறார். செவ்வாய்க்கிரகத்துக்குப் பயணத்தை மேற்கொள்பவர்கள் அங்கிருந்து திரும்புவதற்கு விண்கல வசதியில்லாததால், அங்கு செல்லும் அனைத்து விண்வெளிவீரர்கள் அங்கேயே வாழ்ந்து உயிரிழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது தாயார் உட்பட தனது குடும்பத்தினர் அனைவரும் தனது பயணத்திற்கு ஆதரவளித்துள்ளதாக மகி கூறினார். மகி அவரது பெற்றோருக்கு ஒரே மகளாவார்.
"செவ்வாய்க்கிரகத்திலான முதலாவது குழந்தையை பிரசவிப்பது மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என நான் கருதுகிறேன்" என்று மகி தெரிவித்தார். அவர் செவ்வாய்க்கிரக பயணத்துக்காக 10 வருட கால பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
(வீடியோ கீழே)

No comments:
Post a Comment