Thursday, 19 February 2015

சம்பளம் இல்லை…!! பசி பட்டினி…!! தாய் நாடு திரும்பிய 140 இந்தியர்கள்..!!


ஈராக்கில் கூலி வேலை செய்து வந்த 140 இந்தியர்கள் சம்பளம் கொடுக்காததால், பசியும் பட்டினியுமாக நாடு திரும்பியுள்ளனர். எண்னெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈராக்.
இங்கு உள்ள எண்ணெய் கிணறுகள் மற்றும் இரும்பு தொழிற்சாலைகளின் கட்டுமானப் பணிகளுக்காக, இந்தியாவில் இருந்து 1000க் கணக்கான கூலித் தொழிலாளிகள் சென்றுள்ளனர்.
இவர்களில் பலருக்கு தினசரி கூலி சரிவர கிடைக்காததால், பசியாலும் பட்டினியாலும் அவதிப்பட்டு கடைசியாக, ஈராக்கில் உள்ள இந்திய துதரகத்தை தொடர்பு கொண்டு, தூரதரக அதிகாரிகளின் உதவியுடன் இந்தியா திரும்பியுள்ளனர்.
வெளி நாடுகளில் வேலையும் கை நிறைய சம்பளமும் வாங்கித் தருவதாகச் சொல்லி மோசடி ஏஜெண்டுகள் பலர், அப்பாவி இந்தியர்களை வெளிநாடுகளில், கட்டுமானப் பணிகளுக்கு நாடு கடத்துகின்றனர். மொழி தெரியாத அந்நாடுகளில், அப்பாவித் தொழிலாளிகளின் பாஸ்போர்ட் விசாவை பிடிங்கி வைத்துக் கொள்ளும் ஏஜெண்டுகள், அவர்களது, சம்பளத்தையும் நேரடியாக கட்டுமான நிறுவனங்களிடமிருந்து மொத்தமாக வாங்கிக் கொள்கின்றனர்.
இந்த சம்பளத் தொகையில் பேசியதைக் கூலியாகக் கொடுக்காமல், மாதக்கணக்கில் இழுத்தடித்து ஒரு பகுதியை அவர்களே அடித்து விடுகின்றனர். ஈராக்கில் இவ்வாறு, இழுத்தடிக்கப்பட்டதால், உணவின்றித் பசியால் திண்டாடி வந்த 140 இந்தியர்கள், அந்நாட்டின் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, அவர்களிடம் நிலைமையை எடுத்து கூறியுள்ளனர்.
இதை கேள்விப்பட்ட தூதரக அதிகாரிகள், முதற்கட்டமாக, தொழிலாளிகளை சமரசம் செய்து இந்தியாவிற்கு அனுப்பும் முயற்சியை மேற்கொண்டனர். இதன் படி கடந்த 17ம் தேதி, ஈராக்கிலிருந்து 140 தொழிலாளிகள் இந்தியா வந்து இறங்கினர். அங்கிருந்து 18ம் தேதி அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை அடுத்து அங்கு இடைத் தரகர்களாக இருந்து வேலை கொடுக்கும் நிறுவனத்திடம் பணத்தை வாங்கி தொழிலாளர்களை மோசடி செய்தவர்களின் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment