Thursday, 19 February 2015

வீட்டை இடித்த கட்சி காரர்கள்.. கதறி அழுத டி.ராஜேந்தர்..!


எந்த விழாக்களுக்கு சென்றாலும் தனது ரைமிங் பேச்சால் சரவெடியாக வெடிப்பவர் நம்ப டி.ஆர். இவர் பேசுவதை ரசிப்பதற்கே ஒரு கூட்டம் உண்டு. அது ஏன் என்று சொல்ல தேவையில்லை.
வாயாலையே மியூசிக் போடும் நம்ப டி.ஆர். திரையுலகில் பலத்திறமைகளை உள்ளடக்கியவர்.80கால கட்டங்களில் இவருக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டமும் உண்டு. நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குநராகவும் திரையுலகில் சாதித்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழுக்கு பேட்டியளித்தார். அப்போது சில அதிர்ச்சிகரமான தகவல்களை கூறி கண்கலங்கினார். சினிமாவில் சற்று இறக்கத்தை கண்ட டி.ஆர் திடீரென்று அரசியலில் குதித்து ஒரு பிரபல கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு சில பிரச்சனைகளாலும், சில மன சங்கடங்களாலும் அந்த கட்சியில் இருந்து விலகினார் டி.ஆர். அண்மையில் தன்னுடைய வீட்டை தன் கண்முன்னே கட்சிகாரர்கள் இடித்து தள்ளினார்களாம். இதை பார்த்த டி.ஆர் கதறி அழுதாராம். இதை அந்த முன்னணி இதழுடன் கூறியதுடன் மறுபடியும் கண் கலங்கி விட்டாராம் டி.ஆர்.

No comments:

Post a Comment