2011
பிப்ரவரி 20
மலேசியா வாசுதேவன் நினைவு நாள்…!!
மலேசியாவில் பிறந்து வளர்ந்து, இசை ஆர்வத்தால், சென்னையில் திரைப்பட வாய்பு தேடி வந்தவர் மலேசியா வசுதேவன். கேரள வம்சாவழியான இவர் மலேசியாவில் தமிழ் இசைக் குழுக்களில் முக்கிய பாடகராக விளங்கினார்.
சென்னையில், மலேசியத் தமிழர்கள் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற படம் மூலம் நடிகனாக அறிமுகமானார். 1970களில் 45ற்க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இது தவிற இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் சேர்ந்து பல மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார்.
ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் பாலு விக்கிற பத்தம்மா... என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.
இதை அடுத்து, பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடல் தமிழக மக்கள் மனதில் அவரை நிற்கச் செய்தது.
அதன் பிறகு, கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி என பல பாடல்களைப் பாடினார். பாடகர் நடிகர் என்பதை விட இவரை ஒரு வில்லனாகவே பெரும்பாலானோர் அறிந்திருந்தனர்.
”ஒரு கைதியின் டைரி” படம் தான் இவருக்கு வில்லனாக மக்கள் மத்தியில் அறிமுகம் கொடுத்த படம். இவரது வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் கவர, தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவே நடிக்க ஆரம்பித்தார்.
வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் மட்டும் 85 படங்களில் மலேசியா வாசுதேவன் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு இதில் குறிப்பிட வேண்டிய சில படங்களாகும்.
தமிழக அரசு இவரது பாடல் மற்றும் இசைப் பணிக்காக கலைமாமணி விருது கொடுத்து கௌரவித்தது. வாசுதேவன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் 2011 இதே நாள் பகல் 1 மணிக்கு மரணமடைந்தார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1876 - தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்தார்.
1896 - ஈழத்து தமிழறிஞர், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, மறைந்தார்.
1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
1987 – அருணாச்சல பிரதேசம் தனி மாநிலமாக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
சர்வதேச சமூகநீதி தினம்
.jpg)
No comments:
Post a Comment