தன் மனதில் பட்டதை ’படார்’ என்று பேசுப்பவர் சிம்பு. அப்படி பேசிதான் பல சர்ச்சைகளில் சிக்கிகொள்கிறார். சமீபத்தில் கூட என்னை அறிந்தால் படம் பற்றி ஒரு கருத்தை கூறி பெரும் சர்ச்சையை உண்டாக்கினார்.
இதனால் சில முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சிம்பு மீது கடும் கோபமடைந்தார்கள். தற்போது இவர் பேசிய ஒரு கருத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு முன்னணி வார இதழ் பேட்டியளித்தார் சிம்பு. அப்போது அவரிடம் உங்களுக்கு பிறகு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதிபதியெல்லாம் நல்ல இடத்தை பிடித்து விட்டார்களே என்று கேட்டதற்கு அவர் ‘இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்கிறவர்களை பத்திச் சொல்ல ஒண்ணுமில்லை’ என்று பதில் அளித்திருந்தார்.
அப்போது இது சிவகார்த்திகேயனையும், விஜய் சேதுபதியையும் மறைமுகமாக தாக்குவது போன்று இருந்தது. அப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களும் எந்தவித கருத்து கூறவில்லை. ஆனால் தற்போது அதே பத்திரிக்கைக்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன் சிம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது ‘இதையெல்லாம்விட பெரிய அடியெல்லாம் பார்த்தாச்சு. இது ஒரு விஷயமா? முதல்ல அந்தப் பேட்டியில் என் பேர் இல்லை. அதனால அதுக்கு நான் ரியாக்ட் பண்ணலை. அப்படியே அவர் என்னைத்தான் குறிப்பிட்டிருந்தாலும், அது அவரோட கருத்து. அவர் கருத்தை அவர் சொல்றதுக்கு அவருக்கு உரிமை உண்டு’ கூலாக கூறியுள்ளார்

No comments:
Post a Comment