Thursday, 19 February 2015

உலக வசூலில் முதல் 10 இடங்களில் என்னை அறிந்தால்..!


அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 5ஆம் தேதி வெளியான இப்படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், வசூலுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் வலம் வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை இப்படம் உலகம் முழுவதும் சுமார் 77 கோடிக்கு மேல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிகம் வசூல் செய்த படமாம். இதுவரை இப்படம் ஓவர்சிஸில் மட்டும் சுமார் ரூ 23.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
அதோடு வெளி நாடுகளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் டாப் 10 பட்டியலில் என்னை அறிந்தால் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் எந்திரன், சிவாஜி, தசவதாரம், ஐ, கத்தி, லிங்கா, ஆரம்பம், சிங்கம்-2 ஆகிய படங்கள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment