பிரதமர் மோடி கடந்த திங்கட்கிழமை கூட்டிய அமைச்சரவைக் குழுவில் ரூ.50000 கோடி செலவில் ஏழு போர்க்கப்பல்களை கட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.இது சீனாவை எதிர்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமா என அரசியல் வட்டாரங்கள் பேசிவருகின்றன.
இந்தியக் கடற்படை, சில மாதங்களுக்கு முன்பிலிருந்து சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியப்பெருங்கடலில் இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டதிலிருந்தே பீதியில் தான் இருந்து வருகிறது.
சீன கப்பலானது, இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது சீனா கடற்படையின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது.
கிடைத்துள்ள தகவலின் படி மத்திய அரசு இம்மாத இறுதிக்குள் கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட முயல்வதாக கூறப்படுகிறது. எனினும் எவ்வளவு விரைவாக இதனை தொடங்கினாலும் அனைத்துக் கப்பல்களையும் கட்டிமுடிக்க குறைந்தது பத்தாண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment