தூக்கம் இன்றியமையாத ஒன்று. நாம் பகல் முழுவதும் உழைப்பதால் சோர்வடையும் நம் உடல் மற்றும் மனதுக்கு நல்ல தூக்கம் மிகவும் முக்கியம்.
ஆய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் நாளொன்றுக்கு குறைந்தது 7 முதல் 9 மணிநேரம் இடைவிடாத தூக்கம் வேண்டும் என்று கூறுகின்றனர். தூக்கமின்மை பல கெடுதலை விளைவிக்குமாம்.
சரியான உறக்கமில்லாதவர்களுக்கு உடல் எடைபோடுதல், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகமாதல் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோயகள் வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம்.
சரி நமக்கு தெரிந்த இந்த பிரபலங்கள் எவ்வளவு நேரம் தூங்குகின்றார்கள் என்று பார்க்கலாம்…
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தினமும் இரவில் நான்கு அல்லது நான்கரை மணி நேரம்தான் தூங்குவாராம். மேலும், மதியம், 90 நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவாரம்.
அதேபோல பிரிட்டனின் முன்னாள் பெண் பிரதமர் மார்கரெட் தட்சர் தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே தூங்குவாராம்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தினமும் இரவில் சுமார் 6 மணிநேரம் நிம்மதியான தூக்கம் தூங்கின்றாராம்.
புகழ்பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தினமும் மூன்று அல்லது நான்கு மணிநேரம் தூங்குவாராம்.
மைக்ரோசாஃப்ட் ஓனர் பில்கேட்ஸ் மட்டும்தான் இந்த லிஸ்ட்டில் ஆரோக்யமான தூக்கம் கொள்கின்றார். அவர் தினமும் 7 மணிநேரம் நிம்மதியான தூக்கம் கொள்கின்றாராம்.

No comments:
Post a Comment