சென்னையில் உள்ள போக்குவரத்து சேவைகளில் மிக முக்கியப் பங்கு வகிப்பது சென்னை பறக்கும் இரயில் சேவை. வேளச்சேரி முதல் சென்னை பீச் வரை இயங்கும் இந்த பாதையில், வேலை நேரங்களில் மட்டுமே பயங்கர கூட்டம் இருக்கும்.
இந்நிலையில் நேற்று காலை, வேளச்சேரியில் இருந்து சென்னை பீச் செல்லும் பறக்கும் இரயில் சென்னை பார்க் டவுன் ஸ்டேஷன் அருகே தடம் புரண்டது. இதனால் உயிர்சேதம் ஏதும் இல்லை என்ற போதும். நேற்று முழுவதும் வேளச்சேரி- சென்னை பீச் சேவை பாதிக்கப் பட்டது. இதனால் தரமணி மற்றும் வேளச்சேரியில் பணிபுரியும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
சென்னை பறக்கும் இரயில் சேவையானது கடந்த 1995ஆம் வருடம் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. சுமார் 19 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பறக்கும் இரயிலே இப்படி காலை வாருகிறது. விரைவில் தொடங்கப்பட உள்ள மெட்ரோ என்னெல்லாம் செய்ய காத்திருக்கோ என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
எனினும், இவையனைத்தும் சில சமயம் ஏற்படுவதுதான், இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்றும், பொது மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் தென்னக இரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment