ஆங்கிலம் தெரியாததால் இந்தியர் தாக்கப்பட்ட விவகாரத்தில், அந்த மாநில கவர்னர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த மாதம் 6ஆம் தேதி இந்தியர் ஒருவர் மேடிசன் நகர போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இச்சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ் பாய் படேல், அமெரிக்காவில் வாழும் தனது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். சாலையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த இவரை மேடிசன் நகர போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்துள்ளனர். ஆனால், படேலுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அவரால் அவர்களுக்கு பதில் கூற முடியவில்லை.
அப்போது அவரை போலீசார் கீழே தள்ளியதில் படேல் அடிபட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட காவலர் கைது செய்யப்பட்டார்.
இதற்கு இந்தியா பெரும் கண்டனம் தெரிவித்திருதிருந்தது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் கவர்னர், ராபர்ட் பென்ட்லி மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், இது குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment