’அட்டகத்தி’ படம் மூலம் அறிமுகமானவர் தினேஷ். இப்படம் அவருக்கு எதிர் பார்க்காத வெற்றியைக் கொடுத்ததுடன் தமிழ் சினிமாவில் அவருக்கென தனி இடத்தையும் கொடுத்தது. இதனால் வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
முதல் படத்தில் சென்னை இளைஞனாக நடித்தவர் அடுத்து வந்த ’குக்கூ’ படத்தில் பார்வையற்ற இளைஞராகக் நடித்து எல்லோரையும் கலங்கவைத்தார். திருடன் போலீஸ் படத்தில் நகைச்சுவை கலந்த போலீஸாக நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளிவந்தாலும் ஊடகத்துக்கு இன்னும் ‘அட்டகத்தி’ தினேஷ்தான். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் அழுத்தமாகப் பொருந்தி, யதார்த்தமான நடிப்பைத் தந்தார். தமிழ் சினிமாவில் விஜய் சேதிபதியை போன்று வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார் தினேஷ். அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களுமே வெற்றிப்பெற்றுள்ளது.
அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் நான்காவது படம் தான் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. எங்கேயும் எப்போதும் சரவணனின் உதவியாளர் ராம் பிரகாஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். மற்றும் சதீஷ், ஊர்வசி, மனோபாலா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். காதல், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த ஒரு கமர்ஷியல் படமாக தயாராகியுள்ளது இப்படம். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அட்டகத்தி தினேஷுக்கும், நகுலுக்கும் முக்கியமான படம் என்று சொல்லலாம். படங்களுக்கு படம் வித்தியாசனமான நடிப்பை கொடுத்து வரும் தினேஷ் இந்தப் படத்தில் எப்படி நடித்துள்ளார்..? நகுலுக்கு இப்படம் திருப்பு முனையாக அமையுமா..? என்று நாளைவரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment