Thursday, 12 February 2015

விஜய், அஜித் ரசிகர்கள் இதை கேட்டுக்கங்க..


தன்னுடைய காமெடியில் சமுதாய கருத்துகளை கூறி இளைஞர்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைப்பவர் விவேக். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்தவர் வரிசையாக படங்களை கொடுத்து வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ’என்னை அறிந்தால்’. இதில் அஜித்துக்கு நண்பராக நடித்திருக்கிறார் விவேக். இப்படத்தில் அவருடைய காமெடி காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர் வரும் காட்சிகளில் ரசிக்கர்களை சிரிக்க வைத்துவிடுகிறார்.
சமீபத்தில் என்னை அறிந்தால் படம் பற்றி தன்னுடைய கருத்தை கூறியதுடன் அஜித், விஜய் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அதாவது ‘இன்று சினிமாவை தியேட்டரில் வந்து பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்கள் பற்றி சொல்லத்தேவையில்லை. விஜய், அஜித் படம் என்றால் அவர்களது ரசிகர்கள் திரையரங்களில் நிரம்பி வழிகிறார்கள். ஆனால் ஏன் இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மோதிக்கொள்ள வேண்டாம், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் தமிழ் சினிமா இன்னும் அடுத்த கட்டத்திற்கு செல்லும்’ என்று தன் பாணியிலேயே கருத்து கூறியுள்ளார்.

No comments:

Post a Comment