Thursday, 12 February 2015

போதையில் நர்ஸ் செய்த வேலைய பாருங்க…!


இரு தசாப்தங்களுக்கு முன் மருத்துவமனையொன்றில் மது போதையிலிருந்த மருத்துவ நர்ஸ் (Nurse) ஒருவரால் தாய்மாருக்கு இடமாற்றி குழந்தைகள் வழங்கப்பட்ட சம்பவமொன்று தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மொத்தமாக 1.5 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நஷ்டஈடு வழங்க நீதிமன்றமொன்று உத்தரவிட்ட சம்பவம் பிரான்ஸில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
(வீடியோ கீழே)
1994 ஆம் ஆண்டு சோபி சியர்ரனோ என்ற பெண்ணுக்கும் மற்றொரு பெயர் வெளியிடப்படாத பெண்ணுக்கும் மருத்துவமனையொன்றில் குழந்தைகள் பிரசவமாகின. பிறந்த இரு குழந்தைகளுக்கும் மஞ்சட்காமாலை ஏற்பட்டிருந்ததால் அவை பராமரிப்பு உபகரணத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து அந்தக் குழந்தைகள் மதுபோதையிலிருந்த மருத்துவ நர்ஸ் ஒருவரால் கவனயீனமாக இடமாற்றி கையளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகள் பிறந்து 10 வருடங்கள் கழித்து சோபிக்கு தனது மகள் மனொன் தனது சொந்தக் குழந்தை அல்ல என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில் குழந்தைகள் இடமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இடமாற்றப்பட்டமை கண்டறியப்பட்ட போதும் இரு மகள்மாரும் அவரவரது சொந்த பெற்றோருடன் அல்லாது வளர்ப்புப்பெற்றோருடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment