Thursday, 12 February 2015

கேமராவுக்கு முன் கல கல.. கேமராவுக்கு பின் கப்-சிப்..!


தமிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரை பற்றி எந்த கிசுகிசுக்கள் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். எப்போதும் சிரித்த முகமாகவே காணப்படுவார்.
சினிமாவில் இவர் கலகலப்புக்கு பஞ்சமில்லாதவராக இருந்தாலும் நிஜத்தில் அதிகம் யாருடனும் பேசமாட்டாராம். கேமராவுக்கு முன் கலகலப்பும், கேமராவுக்குப் பின் கப்-சிப்பும் காட்டுவாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கேரக்டருக்காக சிரிக்கிற மாதிரி, டிரெஸ் பண்ற மாதிரி, அழற மாதிரி... நிஜத்தில் பண்ணிக்கிட்டிருக்க முடியுமா..? நிஜமுகம் எப்போதும் நிழல் முகத்தில் இருந்து மாறுபட்டுதானே இருக்கும் என்கிறார் காஜல். இப்போது மாரி படப்பிடிப்பில் மட்டும் தனுஷுடன் கொஞ்சம் கலகலப்பாக நிஜத்திலும் பேசுகிறார் காஜல். தனுஷுக்கு இந்தி தெரியுமே... அதுதான் இந்த சேஞ்சுக்கு காரணமாம்.

No comments:

Post a Comment