Thursday, 12 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 13)


பிப்ரவரி 13
ஹேப்பி கிஸ் டே..!!
காதல் தினத்திற்கு முந்தைய 7 நாட்களும் காதலை அல்லது அன்பைக் குறிக்கும் அம்சங்களின் பெயரில் ஒரு தினமாக உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 7 முதல் 13ஆன இன்று வரை காதல் தின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலர் தின வாரத்தின் கடைசி நாளான இன்று ’கிஸ் டே’. அதாவது முத்த தினம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு முத்தங்களைப் பறிமாறி மகிழும் தினம்.
அது, சரி இந்த வேலண்டைன்ஸ் தினம் என்பது காதலர்களுக்கு மட்டும் தானா, என்றால் கண்டிப்பாக இல்லை. வேலண்டைன்ஸ் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, உண்மையில் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்தவர்கள் என்று பொருள்.
இது நாளடைவில் கிறிஸ்துவர்களின் அன்பர்கள் தினமாக மருவி தற்போது முற்றிலுமாக காதலர் தினமாகவே மாறிவிட்டது. அன்பர்கள் தினத்தன்று கிறிஸ்துவர்கள் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்த்து பரிமாறிக்கொண்டு இனிப்புகள் வழங்குவது வழக்கம்.
இது தான் இன்று, காதலர்கள் மலர்கொத்துக்களுடன், வாழ்த்து அட்டைகளையும் சாக்லேட்டுகளையும் பரிமாறிக் கொள்வதாக மாறியுள்ளது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1879 - இந்தியாவின் முதல் பெண் ஆளுநரும் சுதந்திர போராட்ட வீரருமான சரோஜினி நாயிடு பிறந்தார்.
1914 - பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
இன்றைய சிறப்பு தினம்
உலக வானொலி தினம்

No comments:

Post a Comment