Thursday, 12 February 2015

ஐஸ்வர்யா ராயா நடிக்க ஆசைப்பட்டேன்.. ஐட்டம் கேர்ளா மாத்திட்டாங்களே..


கோலிவுட், பாலிவுட் , டோலிவுட் என்று அனைத்து மொழி படங்களிலும் ஒரு பாடலுக்கு டாப் ஹீரோயின்கள் குத்தாட்டம் ஆடுவதுதான் தற்போதைய டிரெண்ட்.
சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குநர்கள் கூட முன்னணி நடிகைகளை அழைத்து ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடவைத்து விடுகிறார்கள். இதற்கு உதாரணமாக பல முன்னணி நடிகைகளை சொல்லலாம்.
அப்படி தான் ஒரு ஊருல டூ கிங் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடினார் இனிமையான நடிகை. அதற்கு பிறகு இவரிடம் செல்லும் இயக்குநர்கள் எல்லோரும் நடிக்க அழைப்பார்கள் என்று நினைத்தால் எல்லோரும் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடவே அழைக்கிறார்களாம்.
இதனால் மனம் உடைந்த நடிகை நான் ஐஸ்வர்யா ராயா நடிக்க ஆசைப்பட்டேன்.. ஆனால் என்னை ஐட்டம் கேர்ளா மாத்திட்டாங்களே என்று தனக்கு நெருக்கமான சிலரிடம் புலம்பி வருகிறாராம். பாவம் முதல் படத்திலேயே தனது நடிப்பால் விருது வாங்குவார் என்று நினைத்த நடிகைக்கு இந்த நிலமையா..?

No comments:

Post a Comment