Thursday, 12 February 2015

ஹீரோக்களை அசிங்கப்படுத்திய சமந்தா..!


சமீபத்தில் நடிகை சமந்தா அதிகமாக சம்பளம் கேட்கிறார் என்றும் அதன் பலனாக தெலுங்கு படம் ஒன்றில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியானது. இதனால் தெலுங்கு திரையுலகில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.
தற்போது இதுகுறித்து பேட்டயளித்த சமந்தா யாரும் ஹீரோவை பார்த்து படம் பார்க்க வரவில்லை.. ஹீரோயினை பார்த்துதான் வராங்க என்று கூறி ஹீரோக்களை அசிங்கப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு முன்னணி பத்திரிக்கைக்கு பேட்டியளித்த சமந்தா அவருடைய சம்பளம் குறித்த கேட்டப்போது, சினிமா பழைய மாதிரி இல்ல சார், படம் பார்க்க வருபவர்கள் ஹிரோ யாருன்னு பார்த்துட்டு வர்றதுல்ல, ஹிரோயின் யாருன்னு தான் பார்த்துட்டு வர்றாங்க, அந்தளவுக்கு காலம் மாறிப்போச்சு.
ரசிகர்களே இப்படி மாறும்போது நடிகைகள் நாங்கள் ஏன் எங்க சம்பளத்தை உயர்த்தி கேட்ககூடாது. நான் எல்லா படத்துக்கும் சம்பளத்தை உயர்த்தி கேட்கலையே எனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரமாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் நான் தயார் என்று கூறியுள்ளார் சமந்தா.
சமந்தாவிற்கு தெரியவில்லை போல, தமிழிலும் சரி, தெலுங்கிலும் சரி, ரசிகர்கள் படம் பார்க்க வருவதே அவர்களுடைய நடிகர்களுக்காக தான் என்று. அப்படி ஹீரோயினுக்காக தான் படம் பார்க்க ரசிகர்கள் வருகிறார்கள் என்றால் எதற்காக கோடிக்கணக்கில் கொட்டி ஹீரோக்களை ஒப்பந்தம் செய்யவேண்டும். அந்த காசுக்கு ஐந்தாறு ஹீரோயின்களை வைத்து படம் எடுத்து விடலாமே..

No comments:

Post a Comment