சொட்டை, இப்போதெல்லாம் 20 வயது பசங்களுக்கு கூட இந்த பிரச்சனை இருக்கின்றது. 20 வயதில் சொட்டை விழ ஆரம்பித்தால் அவ்வளவுதான், திருமணமாகும் போது பாதி சொட்டையுடன் தான் சுற்ற வேண்டும்.
ஏன் இப்படி சொட்டை விழுகிறது?? என்ன காரணம் என்று தெரியுமா??
இன்று நாம் பார்க்கப் போவது அதைதான்…
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு மட்டும் கேடு இல்லை. உங்கள் முடிக்கும் கூடத்தான். புகைப்பிடிப்பதால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இதானல், மயிரிழைகளுக்கு போதிய ஊட்டமின்றி முடி உதிர்கிறது.
தூக்கமின்மை, இரவில் சரியான தூக்கமின்மையும் முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணம் ஆகும்.
சத்தில்லாத உணவுகள், சுவைக்காக அனைத்து உணவுகளையும் வெலுத்து வாங்கி விட்டு சத்தான உணவுகளை டீலில் விட்டு விடுவதும் ஒரு பிரச்சனைதான்.
பரம்பரை, சொட்டை சிலருக்கு பரம்பரை பரம்பரையாக விழும், இதை தடுக்க முடியாது.
மன அழுத்தமும் ஒரு காரணம்தான். மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும், முடி உதிர்தல் ஏற்படும்.

No comments:
Post a Comment