தீவிரவாதிகள் குண்டுகள் பொருத்தப்பட்ட ஆளற்ற விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், பிரான்ஸானது அத்தகைய ஆளற்ற விமானங்களை தடுக்கக்கூடிய உயர் தொழில்நுட்ப பறக்கும் வலையொன்றை வடிவமைத்துள்ளது.
பாரிஸின் கிழக்கே லா கியுயூஎன் பிறி எனும் இடத்தில் மேற்படி பறக்கும் வலையின் செயற்பாடு சோதிக்கப்பட்டு செய்து காண்பிக்கப்பட்டது. இதன் போது பறக்கும் வலையானது கடந்த மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகை பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்த ஆளற்ற விமானத்தையொத்த ‘டிஜெஐ பன்டம் 2’ ஆளற்ற விமானத்தை சிறைப்பிடித்தது.
இந்த பறக்கும் வலையானது மற்றொரு ஆளற்ற விமான கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment