Thursday, 12 February 2015

கம்பியூட்டர் கண்காணிப்பில் பரபரப்பாக நடக்குது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்..!!


கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தல் காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்பானதை அடுத்து இழந்த ஸ்ரீரங்கம் எம். எல். ஏ., தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை தொடரும் இத்தேர்தலில் முடிவுகள் வரும் 16ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. முன்னாள் முதல்வரே ஆட்சி செய்த தொகுதி என்பதால் இந்த ஸ்ரீரங்கம் தொகுயை பிடிப்பதில் எதிர்கட்சிகள் கடும் முயற்சியில் இறங்கின. இந்த தேர்தலில், எதிர்கட்சியான, தி.மு.க., சார்பில் ஆனந்தனும், தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ள அ.தி.மு.க., சார்பில் எஸ். வளர்மதியும், மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க., சார்பில் சுப்பிரமணியனும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், அண்ணாதுரையும் உட்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலின் பிரச்சாரத்தின் போதே பல குளறுபடிகளும், சர்ச்சைகளும், பூசல்களும் நிகழ்ந்ததால், இந்தத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தேர்தலில் முதன் முறையாக வாக்களர் வாக்கை பதிவு செய்ததும், தேர்தல் அதிகாரிக்கு வாக்கு பதிவு செய்து விட்டார் என்பதை தெரியப்படுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையர்களுக்கு கையடக்கக் கண்ணி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு பதிவிக்கும் போது முறைகேடுகளைத் தவிற்கும் வண்ணம், வாக்குப் பதிவை கண்காணிக்க வாக்குச் சாவடிகளில், கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 3,000 போலீஸார் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். துனை ராணுவமும் பாதுகாப்பு நிமித்தமாக வரவழைக்கப்பட்டுள்ளது. இது தவிற, பதற்றம் நிறைந்த 79 வாக்குச்சாவடிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment