உலகக் கோப்பை தொடரின் 9 ஆவது லீக் ஆட்டம் இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நியூசிலாந்து வீரர்களின் தாக்குதலை சாமாளிக்க முடியாமல் 33.2 ஓவர்களில் 123 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் ரூட் மட்டுமே 46 ரன்கள் எடுத்தார். நியூசியின் பவுலர் சவுதீ 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசி அணியின் மெக்கல்லம் தனது ருத்ர தாண்டவத்தினை வெளிப்படுத்தினார். மேட்ச் பார்ப்பவர்களுக்கு இது லைவ் மேட்சா இல்லை ஹைலைட்ஸ் பார்க்கின்றோமா என்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு அவரது ஆட்டம் இருந்தது.
25 பந்துகளில் மெக்கல்லம் 8 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடித்து 77 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய நியூசி அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

No comments:
Post a Comment