Thursday, 19 February 2015

ஓபன் தி டாஸ்மாக் ஒர்க் அவுட் ஆகிடுச்சு போலயே…!!


மதுபான விற்பனை நிலையங்களை இரவு 12 மணி வரை திறந்து வைக்க புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாம். சரக்குக்கு பெயர் போன புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இரவில் சரக்கு கிடைப்பதில்லை. இதனால், மது விற்பனை நிலையங்களின் மூடும் நேரத்தை நீட்டிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை ஏற்றுக் கொண்ட அரசு, புதுச்சேரியில் மதுபான மொத்த விற்பனை கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கவும், சில்லரை விற்பனை கடைகள், காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி கொடுத்துள்ளது.
மேலும் சுற்றலாப் பிரிவுச் சட்டம் 89ன் கீழ், மதுபான விற்பனையகங்களை காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது.
பாண்டிச் சேரியில் நடு இராத்திரி வரை சக்கு கிடைக்கும் என்ற செய்தி கேட்டதும், சுற்று வட்டார குடிமக்கள் அனைவரும் செம குஷியில் இருக்கின்றனர். போன வருஷம் ”மான் கராத்தே” படத்துல வந்த ‘ஓபன் தி டாஸ்மாக்’ பாட்டு இப்பதான் ஒர்க் அவுட் ஆயிருக்கு.

No comments:

Post a Comment