தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனேகன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் உலகம் முழுவதும் நல்ல வசூலையும் குவித்து வருகிறது. இதனால் தனுஷ் உட்பட படக்குழுவினர் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளனர்.
வேலையில்லா பட்டதாரியை தொடர்ந்து இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சந்தோஷத்தில் மிதக்கும் தனுஷ் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அந்த உரையாடலில் சில சுவாரஸ்யங்கள் நடந்தது. ரசிகர் ஒருவர் எப்பொழுது படம் இயக்குவீர்கள், இயக்கினால் எங்கள் விஜய் அண்ணாவை வைத்து படம் எடுப்பீங்களா என்று கேட்டார். அதற்கு தனுஷ் இயக்குநராக நான் தயார் என்றும் தோன்றும்போது விஜய் சாருக்கு என் கதை பிடித்து டேட்ஸ் கொடுத்தால் மட்டும் போதும் என்று கூறினார்.
மேலும் அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு, ஒரு நடிகராக, மனிதராக அவர் மீது அதிகம் மரியாதை வைத்துள்ளேன் என்றார் தனுஷ்.

No comments:
Post a Comment