Tuesday, 17 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 18)


பிப்ரவரி 18
1929
ஆஸ்கார் விருது முதன் முதலாக அறிவிக்கப்பட்ட தினம்!!
ஆஸ்கார் விருதுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் அகாடமி விருதுகள் அமெரிக்காவின் திரைத்துறைக்கான மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
உலக அளவில் தொலைகாட்சி வாயிலாக காணப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விருது வழங்கும் விழாவாக இது கருதப்படுகிறது. 1929ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தான் முதல் அகாடமி விருது வழங்கும் விழா நடந்தது.
ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் வெறும் 270 மக்களின் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. அன்று வெறும் 15 அகாடமி விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டன. 1930ம் வருடமே இவ்விருதுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
இவ்விருதிற்கான வெற்றியாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டனர். இவ்விருதின் தகவல்கள், பத்திரிக்கைகளிலும் சூடான செய்தியானது.
இன்று உலக அளவில் இவ்விருதுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக சினிமாவின் முதன்மையான விருதாக இது கருதப்படுகிறது.
1836
விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தார்…!!
ஸ்ரீ கதாதர சட்டோபாத்யாயர் அல்லது ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அறியப்படுபவர் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மிகப் பெரிய ஆன்மீகவாதி ஆவார். இவரது சீடர்களில் குறிப்பிடத்தக்கவர், விவேகானந்தர்.
மதங்கள் அனைத்தும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகள் என்பது இவரது கருத்து. மேற்குவங்கத்தில், காமார்புகூர் என்ற கிராமத்தில் க்ஷூதிராம் – சந்திரமணிதேவி என்பாருக்குப் நான்காவது மகனாகப் பிறந்தார் ராமகிருஷ்ணர்.
சிறுவயதில் படிப்பில் அதிக நாட்டமில்லாத இவர், கடவுள் பற்றி பாடுவதையும், கடவுள் உருவங்களை வரைவதிலும் ஆர்வமாக இருந்தார். விளையாட்டாகவே சிறுவயது கழிந்தது.
ஒரு கட்டத்தில், அவரது தாய் மறைந்ததால் அவரது சகோதரரான ராம்குமாரின் அறவனைப்பில் வளர்ந்து வந்தார். ராம்குமாரும், ராமகிருஷ்ணரும் தட்சிணேசுவரம் காளி கோயிலுக்குச் சென்றனர். சில சர்ச்சைகளால் அவர்கள் அங்கேயே தங்க நேரிட்டது.
இருவரும் காளி கோயிலில் தங்கி வேலை பார்த்தனர். இச்சமயம், வேலை நிமித்தமாக கல்கத்தா சென்ற ராமகிருஷ்ணரின் சகோதரர் அங்கேயே இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அன்றிலிருந்து ராமகிருஷ்ணர் காளி கோவிலிலேயே தங்கி விட்டார்.
காளியின் மீது அதிக பக்தி கொண்ட ராமகிருஷ்ணர் தினமும் காளியைக் காண வேண்டும் என்று தியாணத்தில் ஈடுபட ஆரம்பித்தார். காடு, கோயில் என மாறி மாறி தியாணம் இருந்தும் பயனில்லை.
ஒரு கட்டத்தில், காளி கையில் இருந்த வாளை எடுத்து தன்னைத் தானே வெட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார் ராம கிருஷ்ணர். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் ஈடுபட்டு இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார். அன்று முதல் அவரது நடவடிக்கைகள் சுத்தமாக மாறிவிட்டன.
அவருக்கு மனநிலை சரி இல்லை என்று எண்னிய அவரது தாய், அவருக்கு மணமுடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணினார். அதைக் கேட்ட ராமகிருஷ்ணர், கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார்.
அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அவரைக் காண பக்தர்கள் பலர், கூடினர். அவருக்கு சீடர்களாகவும் சிலர் முன்வந்தனர். அவரிடம் ஆன்மீகம் குறித்து விவாதித்து தெளிந்தனர்.
இவரது சீடர்களில் மிகவும் முக்கியமானவர் விவேகானந்தர். விவேகானந்தர் தான் ராமகிருஷ்ணரின் கருத்துக்களை உலகறியச் செய்தவர்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1911 - முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது
1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1967 - அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்
இன்றைய சிறப்பு தினம்
பேச்சு மொழி தினம் (ஆமாமி தீவுகள், ஜப்பான்)
சுதந்திர தினம் (காம்பியா)
தேசிய ஜனநாயக நாள் (நேபாளம்)
"மகளிர் தினம்" (ஜோரோஸ்ட்ரியன் ஈரான்)

No comments:

Post a Comment