Tuesday, 17 February 2015

பாகிஸ்தான் பெண்ணை காதலிக்கும் விக்ரம் பிரபு..!


இயக்குநர் விஜய் இயக்கிவரும் 'இது என்ன மாயம்' படத்தில் பிஸியாக நடித்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக ஜி.என்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜி.என்.குமரவேலன் நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் கதை, இந்திய இளைஞன் ஒருவனுக்கும், பாகிஸ்தான் இளம்பெண் ஒருவருக்கும் ஏற்படும் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய சில காட்சிகள் வாஹா எல்லையில் படமாக்கப்படவுள்ளதாகவும், அதற்கான சிறப்பு அனுமதியையும் படக்குழுவினர் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மும்பை தொலைக்காட்சி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், தமிழுக்காக அவரது பெயர் மாற்றப்படவுள்ளதால் அவரது பெயர் மற்றும் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment