Tuesday, 17 February 2015

துப்பாக்கியால் சுட்டும், சிலுவையில் அறைந்தும் மரணதண்டனை..!


சிரியா நகரான அல்பாப்பில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இருவருக்கு துப்பாக்கியால் சுட்டும் ஒருவருக்கு சிலுவையில் அறைந்தும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் அந்தப் தீவிரவாதக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளன.
முதல் தொகுதி புகைப்படங்களில் செம்மஞ்சள் ஆடையணிந்த இருவர் தீவிரவாதிகளின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர். மகிழ்ச்சியாரவாரம் செய்தவாறு நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்திருக்க முகமூடியணிந்திருந்த தீவிரவாதிகள் மண்டியிட்டு அமர்ந்திருந்த இருவர் மீதும் துப்பாக்கிப் சூட்டை நடத்துகின்றனர்.
மற்றொரு புகைப்படம் கம்பமொன்றில் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்டுள்ள ஆணொருவரின் சடலமொன்றை மக்கள் சூழ்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. மேற்படி சிலுவையில் அறையப்பட்ட ஆணின் சடலத்தில் செய்தியொன்றும் எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது.
இந்த மரணதண்டனை நிறைவேற்ற புகைப்படங்களில் பார்வையாளர்கள் மத்தியில் சிறுவர்கள் பலர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச் சாட்டில் முஹமட் முஸலம் என்பவரை பிடித்து வைத்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment