தூசு துணிக்கைளை உறுஞ்சி அகற்றும் தன்னியக்க ரோபோ கருவியை பயன்படுத்தி விட்டு தரையில் படுத்துறங்கிய பெண் ஒருவர், தனது தலை முடியை இழந்த விபரீத சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.
சாங்வொன் நகரிலுள்ள தனது வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்த குறிப்பிட்ட பெண், தன்னியக்க ரோபோ இயந்திரம் (robot vacuum cleaner ) தரையை சுத்தம் செய்யும் வரை தரையில் ஓய்வாக சாய்ந்திருக்க தீர்மானித்துள்ளார்.
இதன் போது அவர் தன்னையறியாது உறங்கி விடவும் தன்னியக்க ரோபோ சுத்திகரிக்கும் இயந்திரம் அவரது தலை முடியை தூசு துணிக்கையென கருதி அகத்துறிஞ்சியுள்ளது. திடுக்கிட்டு கண் விழித்த அந்தப் பெண், தனது முடியை இயந்திரத்தில் இருந்து விடுவிக்க போராடினார்.
எனினும் அவரால் தனது முடியை விடுவிக்க முடியவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு அவரது முடியை அந்த இயந்திரத்திலிருந்து விடுவித்தனர். அந்தப் பெண் தனது அழகிய தலை முடியை இழந்த போதும், அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி தப்பியுள்ளார்.

No comments:
Post a Comment