Thursday, 12 February 2015

குட்டைப் பாவாடையால் நடிகைக்கு நடந்த சோகம்..!


ஹெட் நடிகருக்கு ஜோடியாக ஹிஸ்ட்ரி படத்தில் நடித்தவர் இந்த மூன்றெழுத்து நடிகை.
ஒரு சில தமிழ் படங்களுக்கு பிறகு கேரளா பக்கம் போனவர் திரும்பி தமிழுக்கு வரவே இல்லை. தற்போது பெல்லும் ரத்னமும் சேர்ந்த இயக்குநர் இயக்கிவரும் ஒரு படம் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீ-என்ட்ரீ கொடுக்கவிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குட்டைப் பாவாடை அணிந்து போஸ் கொடுத்த தனது புகைப்படத்தை சமூக வளைத்தளத்தில் வெளியிட்டிருந்தார் அந்த நடிகை. அவ்வளவுதான், இதைப்பார்த்த இணைய ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றிவிட்டார்கள்.
“இந்த வயசுக்கு மேல இது தேவையா? இப்படி போஸ் கொடுக்குறீங்களே, உங்களுக்கே இது நியாயமாகப் படுகிறதா?” என்றெல்லாம் போட்டுத் தாக்கிவிட்டார்கள்.
இதைக் கண்டு கொதித்துப்போனா அந்த நடிகை “அப்டின்னா குட்டைப் பாவாடை அணிந்துவிட்டால் நான் தப்பானவளா? நான் எந்த உடை அணியணுங்கிறத தீர்மானிக்கிறதுக்கு நீங்க யார்? எந்தச் சூழ்நிலையில் எந்த உடையைப் போடணும்னு எனக்குத் தெரியும். உங்க வேலையை பார்த்துட்டு போங்க” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment