Thursday, 12 February 2015

கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு... அனேகனுக்கு தீர்வு..!


தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் அனேகன்.
பிப்ரவரி 13-ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவிருக்கும் இப்படத்தில் சலவைத் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் விதமாக சில காட்சிகள் இருப்பதாக கூறி மாரிச் செல்வம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ’படம் தணிக்கை சென்று வந்து விட்டது, இனி உங்களுக்கு பிரச்சனை என்றால் தணிக்கை குழுவினரை தான் சந்திக்க வேண்டும்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இதனால் படம் சொன்ன தேதியில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாகும் என்று தெரிகிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷிக்கு ஜோடியாக அமிரா தஸ்துர் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment