2015ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதன் தொடக்க விழா ஆரம்பமாகியுள்ளது.
இந்திய நேரப்படி சுமார் 1.30 மணியளவில் உலகக்கோப்பை போட்டிகள் ஆரம்பமானது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடியாக் ஒளிபரப்பி வருகிறது. இவ்வருட போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு நாடுகளில் நடைபெறுவதால், இரண்டு நாடுகளிலும் தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.
அனைத்து அணி வீரர்களும் அணிவகுத்து வந்து விழாவினை தொடங்கினர். வானவேடிக்கைகள், இசைக் கச்சேரி என தொடக்க விழா கலைகட்டி கொண்டிருக்கின்றது. ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்து வருகின்றனர்.
1992ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸி மற்றும் நியூஸியில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment