Thursday, 12 February 2015

இது முகேஷின் காதல் கதை!!


அமெரிக்காவைச் சேர்ந்த அட்ரினா என்ற பெண்மனி, இந்தியாவின் ஹரியான மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் விவசாயியாக வாழும் முகேஷை காதலித்து திருமணம் செய்து, அவரும் சாதாரண இந்திய கிராமப்புற பெண்ணைப் போல வாழ்ந்து வருகின்றார்.
41 வயதான அட்ரினாவுக்கு 25 வயதில் திருமணமான ஒரு பெண்ணும் அவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. அக்குப் பஞ்சர் கிளினிக்கில் ரிசப்ஷனிஸ்டாக வேலைபார்த்து வந்த அட்ரினா, இந்தியாவில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் 25 வயது முகேஷுடன் ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, பழகியுள்ளார்.
இருவரும் ஃபேஸ்புக்கிலேயே நெருக்கமாகியுள்ளனர். பின்னர் முகேஷ் அவரை காதலிப்பதாக அட்ரினாவிடம் கூறியுள்ளார். ஆங்கிலம் சரியாக தெரியாது என்றாலும் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கூறியுள்ளார். மேலும் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். எனினும் தனது ஆசையைக் கூறும் முன் முகேஷ் உண்மையான ஆள் தானா?? இல்லை ஏமாற்றுக்காரரா என்று உறுதி செய்ய இந்தியா பறந்து வந்துள்ளார், அட்ரினா.
மக்கள் தொடர்பியலில் பட்டதாரியான அட்ரினா, ஒரே பார்வையில் முகேஷ் நம்பகத்தன்மை மிக்கவர் என்பதை உறுதி செய்து உடனே திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டார். இந்திய முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.
அமெரிக்காவில் சுதந்திர வாழ்க்கை, எந்தவித கட்டுப்பாடும் கிடையாது, ஷாப்பிங், ஸ்டைலான வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தவர் அட்ரினா. தற்போது, சாதாரண இந்திய கிராமத்துப் பெண் எப்படி இருப்பாரோ அதற்கான பாரம்பரிய உடையில், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு முகேஷுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார்.
வசதியான வாழ்க்கையை அனுபவித்து வந்தவர். இங்கு தினசரி வீட்டின் தரையை கையால் மொழுகி விடுகிறார். சாதாரண அடுப்பில் சமையல் செய்து குடும்பத்தினை பொறுப்பாக கவனித்து வருகிறார்.
அட்ரினா இது பற்றி கூறும் போது, ‘முதலில் எனக்கு கடினமாகத்தான் இருந்தது. ஆனால், உண்மையான காதலுக்கு முன் எதுவும் பெரிதில்லை என்பது தெரியும்தானே?? இப்போது பழகிவிட்டது. நான் முகேஷுடன் மிக மகிழ்வாக வாழ்ந்து வருகின்றேன்’ என்று கூறுகிறார்.
இந்த தம்பதி தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மதம், வயது, முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை இவற்றையெல்லாம் தாண்டி இவர்களின் காதல் வென்றுள்ளது.

No comments:

Post a Comment