Thursday, 12 February 2015

சூர்யாவும்... அமலா பாலும்... ஹைக்கூவும்..!


இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ’ஹைக்கூ’ என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கி வரும் பாண்டிராஜ் இப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ‘பசங்க’ படத்தைப் போன்றே இப்படத்தையும் சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கவிருக்கிறாராம் பாண்டிராஜ்.
இப்படத்திற்கு இதுவரை தலைப்பு ஏதும் வைக்கவில்லை. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘ஹைக்கூ’ என்று பெயர் வைத்துள்ளதாக பாண்டிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யாவும், காமெடி நடிகர் சத்யனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நடிகை அமலாபாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
முதலில், அமலாபால் கதாபாத்திரத்தில் ஜோதிகாதான் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மறுக்கவே தற்போது அமலாபாலை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment