Thursday, 12 February 2015

தமன்னா மட்டும் எப்படி சிக்காமல் இருக்கிறார்..!


தற்போது இருக்கும் நடிகைகள் எல்லோரும் நடிக்கிறார்களோ இல்லையோ.. ஆனால் கிசுகிசுவில் மட்டும் சிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படியே அவர்களை பற்றி கிசுகிசுக்கள் வரவில்லை என்றால் ஏதாவது ஒரு சர்ச்சைகுரிய கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.
ஆனால் திரையுலகிற்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் வருகிறார் தமன்னா.. குறிப்பாக காதல் கிசுகிசுவில் அவர் பெயர் அடிப்பட்டதுக்கூட இல்லை. இதனால் இந்த நடிகை மட்டும் எப்படி எதிலும் சிக்காமல் வருகிறார் என்று ஆச்சரியப்படுகின்றனர் கோடம்பாக்கத்தினர்.
இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது, காதலிப்பதற்கு எனக்கு நேரமே இல்லை. மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஒரு நடிகை என்ற முறையில் எனக்கு சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத வெளி ஆட்களை சந்திப்பதற்கு நேரமே இல்லை. திரையுலகில் என்னை சுற்றி எப்போதும் சினிமா சம்மந்தப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள்.
சினிமாவை பற்றியே எப்போதும் சிந்திக்கவும் பேசவும் முடிகிறது. சினிமா என்னை நிறைய மாற்றி உள்ளது. இது எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. பிரபலமாக இருப்பது கஷ்டமானது. ஆனாலும் என்னைப் பற்றி பெரிய புகார் எதுவும் இதுவரை வந்தது இல்லை.. இனிமேல் வரவும் வராது என்று கூறினார்.

No comments:

Post a Comment