Thursday, 12 February 2015

எல்லாமே வதந்தியாம்..?


கடந்த இரண்டு நாட்களாக அனைத்து இணைத்தளங்களிலும் என்னை அறிந்தால் படம் வெற்றிப்பெற்று விட்டதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கெளதம் மேனன் எடுக்க இருக்கிறார் என்றும், படத்தின் கதையை கெளதம் மேனன் அஜித்திடம் கொடுத்து விட்டார் என்றும் செய்திகள் வெளியானது.
மேலும் அஜித் ஓகே சொன்னால் மட்டும் போதும் படத்தை ஆரம்பிக்கலாம் என்றும் கெளதம் மேனன் சொன்னதாக கூறப்பட்டது. ஆனால் இதெல்லாம் வதந்தியாம். அப்படி ஒரு திட்டமே கௌதம் மேனனுக்கும், அஜித்துக்கும் இல்லையாம்.
தற்போது சிம்பு பட வேலைகளில் கெளதம் மேனன் பிஸியாக இருக்கிறாராம். இந்தப் படத்தை முடித்த பிறகு தான் தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்க உள்ளாராம் கௌதம் மேனன்.

No comments:

Post a Comment