தமிழ் சினிமா எண்ணற்ற திறமைமிக்க கலைஞர்களின் புகலிடமாய் இருந்துள்ளது. கேரளத்திலிருந்து மற்றுமொரு திறமைமிக்க நடிகையை பெற்றுள்ளது தமிழ் சினிமா, இயக்குனர் A வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் ஸ்ருதி பாலா .
‘மிர்ச்சி’ செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ’ சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “ விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும்பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன. சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு பாவங்கள் கொண்டு வருவது சுலபமாய் அமைந்தது.
இருப்பினும் எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் சார் இக்கதையை கூறினார். ‘அங்காடி தெரு’ படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா என்று ஆச்சரியத்தில் இருந்தேன்.
இப்படத்தில் முழுக்க முழுக்க உதவியாய் இருந்தார்.” “ ‘ரொம்ப நல்லவன்டா நீ’ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். ‘மிர்ச்சி’ செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர்.
இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில் , ‘ரோபோ’ சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள். ‘ரோபோ’ எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்” என்று கூறினார் ஸ்ருதி பாலா.

No comments:
Post a Comment